ADDED : டிச 20, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கால்நடைகளுக்கு கால், வாய் காணை நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கிய நிலையில் 21 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது
2,91,700 கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் பசுக்கள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையால் அந்தந்த ஊராட்சிகளில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட உள்ளது.