/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கமிஷனர் இல்லாமல் முடங்கிய வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
/
கமிஷனர் இல்லாமல் முடங்கிய வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
கமிஷனர் இல்லாமல் முடங்கிய வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
கமிஷனர் இல்லாமல் முடங்கிய வடமதுரை ஊராட்சி ஒன்றியம்
ADDED : ஜன 24, 2024 05:18 AM

வடமதுரை, : வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஒ., பணியிடம் 23 நாட்களாக நிரப்பப்படாததால் பல்வேறு சிக்கல்களுடன் ஊழியர்கள் பரிதவிக்கின்றனர்.
இங்கு பி.டி.ஒ.,வாக இருந்த கீதாராணி டிச.31ல் பணி ஓய்வு பெற்றார். இதற்கு பின்னர் புதிய பி.டி.ஒ., நியமிக்கப்படாமல் உள்ளது. கூடுதல் பொறுப்பு என்ற அடிப்படையிலும் யாரையும் நியமிக்கவில்லை. வளர்ச்சி திட்ட பணிகள் செய்த ஒப்பந்ததாரர்கள், ஊழியர்களுக்கான சம்பளம், இதர செலவு தொகைகளை பட்டுவாடா செய்ய முடியாமல் நிர்வாகம் தவிக்கிறது . பொதுவாக புதிய பி.டி.ஒ., பொறுப்பேற்ற பின்னர் பணம் வழங்கும் அதிகார நடைமுறைகள் முழுமையாகுவதற்கு ஒரு வாரம் தேவைப்படும். தற்போது வரை பி.டி.ஒ., பணியிடம் காலியாக இருப்பதால் ஜனவரிக்கான சம்பளம் உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு கிடைப்பது சந்தேகமாக உள்ளது. ஒன்றிய தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி கூறியதாவது: ஓராண்டில் மட்டும் 4 பி.டி.ஒ.,க்கள் வந்தும், சென்றும், ஓய்வு பெற்றும் உள்ளனர்.
இவர்கள் அடிக்கடி மாறுவதால் நிர்வாக பணிகளில் அதிக பாதிப்பு உள்ளது. பி.டி.ஒ., ஓய்வு பெற்று 23 நாட்களாகியும் புதிய பி.டி.ஒ., பொறுப்பேற்காததால் நிர்வாக பணிகள் முடங்கி கிடக்கிறது. இதை கருதி விரைவில் பி.டி.ஒ.,வை நியமிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.

