ADDED : மே 26, 2025 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மகா பரமேஸ்வரி மாரியம்மன் ராஜ அலங்காரத்துடன் தேரில் அமர வைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மண்டகப்படிகளில் எழுந்தருளிய அம்மனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆங்காங்கே பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் நடத்தினர். தப்பாட்டம், தேவராட்டம், கும்மி, கோலாட்டம் வானவேடிக்கையுடன் தேரோட்டம் நடந்தது. எஸ்.பி., பிரதீப் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாணவேடிக்கையின் போது பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பாலமுருகனின் வயிற்றில் பட்டாசு பட்டதில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.