/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீரால் இயல்பை இழக்கும் வையாபுரிகுளம்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீரால் இயல்பை இழக்கும் வையாபுரிகுளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீரால் இயல்பை இழக்கும் வையாபுரிகுளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீரால் இயல்பை இழக்கும் வையாபுரிகுளம்
ADDED : ஆக 22, 2025 02:46 AM

பழநி: பழநி வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலப்பதாலும், அமலை செடி ஆக்கிரமிப்பாலும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
பழநி வையாபுரி குளம் 300 ஏக்கரில் உள்ளது.இதில் 5.25 ஏக்கர் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. வையாபுரி குளம் மூலம் நேரடியாக நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய பாசன வசதி பெற்று வருகிறது. குளத்தின் கரைகள் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது. துார்வாராததால் தண்ணீர் தேக்கிவைக்க முடியாத நிலையும் உள்ளது.
குளங்களில் கலக்கும் கழிவு நீரால் தனது இயல்பை இழந்து காணப்படுகிறது . கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல தண்ணீராக மாற்ற முயற்சி அவசியமாகிறது. இங்குள்ள வையாபுரி கரையை மேம்படுத்தி நடைபாதை பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
இதோடு குளம் அமலை செடிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் தேங்கும் நீரானது மாசடைகிறது.
குளத்தில் கலக்கும் கழிவு நீரால் மீன்களும் இறக்கிறது. குளத்தின் கரையில் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையுடன் நோய் தொற்றும் ஏற்படுகிறது.
குளத்தை மீட்க வேண்டும் கோகுலகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பழநி : வையாபுரி குளம் பழநியின் அடையாளமாக உள்ளது. இந்த குளம் மிகவும் புனிதமானது. கழிவுநீரால் மாசு அடைந்துள்ள குளத்தை மீட்க வேண்டிய கடமை நம் தலைமுறைக்கு உண்டு.
பழநி முருகன் கோயிலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்த குளத்தில்தான் கலக்கிறது. குளத்தில் குப்பை கொட்டப்பட்டு குப்பைமேடாக உள்ளது. இதனால் குளம் தன் இயல்பு நிலையிலிருந்து மாறி உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரம், பாழ் பட்டு உள்ளது. ராஜ வாய்க்காலில் வரும் தண்ணீர் தடைபட்டு உள்ளது. குளத்தில் இருந்து செல்லும் நீரால் சிறுநாயக்கன் குளம், பாப்பான்குளம் போன்றவை கழிவு நீரால் பாதிக்கிறது. அமலை செடிகளால் குளத்தின் நீர் , மண் பாதிக்கப்பட்டுள்ளது.
தேவை நடவடிக்கை சந்தானதுரை, விவசாயி,வையாபுரி கண்மாய் பாசன விவசாயிகள் சங்கம் : வையாபுரி குளத்தில் 5.25 ஏக்கர் பஸ் ஸ்டாண்டுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் பஸ் ஸ்டாண்ட் தவிர எந்த பயன்பாட்டிற்கும் வையாபுரி குளத்தின் நிலத்தை பயன்படுத்தக் கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டை சுற்றிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் குளம் நீர் பிடிப்பு பகுதிகள் பாதிப்பு அடைகின்றன. மேலும் ஜி.பி.எஸ்., சர்வே மூலம் அளக்கப்பட்ட பகுதிகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

