/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் கவிழ்ந்த வேன், கார்: 13 பேர் காயம்
/
ரோட்டில் கவிழ்ந்த வேன், கார்: 13 பேர் காயம்
ADDED : ஏப் 17, 2025 06:18 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வெறு இடங்களில் விபத்துக்களில் 13 பேர் காயமடைந்தனர்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த 12 பேர் வேன் ஒன்றில் பழநி முருகன் கோயிலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை ஒட்டன்சத்திரம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசப்பபிள்ளைபட்டி பிரிவு அருகே சென்றபோது சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. துவரங்குறிச்சியை சேர்ந்தவேன் டிரைவர் ஜலாலுதீன் 27, மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன் உட்பட 8 பேர் காயமடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேடசந்துார்: நாகர்கோவில் கட்டிக்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ் 42. மனைவி, இரு குழந்தைகளுடன் காரில் வேடசந்துார் வழியாக ஆந்திரா நோக்கி சென்றார். காரை பால்ராஜ் ஓட்டினார்.வேடசந்துார் கரூர் மெயின் ரோட்டில் காசிபாளையம் மேம்பாலம் அடுத்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர தடுப்பு கற்களை உடைத்து கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. பால்ராஜ், குழந்தைகள் ஹரிணி 11, அஜித் இருவரும் பலத்த காயத்துடன் திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
நத்தம்: மதுரை மாவட்டம் கள்ளந்திரியை சேர்ந்தவர் தேவராஜ் 60. நேற்று முன்தினம் இரவு வாடகை காரில் நத்தம் வழியாக திண்டுக்கல் சென்றார்.காரை மதுரை வண்டியூர் யாகப்பன் நகரை சேர்ந்த சக்திவேல் 21,ஒட்டினார். வீமாஸ் நகர் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர், தேவராஜ் காயமடைந்தனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.