
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் வன் மகோத்சவ்வை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள் தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் பட்டாபிராமன் கூறுகையில், இந்தியா முழுவதும் ஜூலை 1 முதல் பத்து நாட்கள் வரை வன் மகோத்சவ் விழா அனுசரிக்கப்பட்டு லட்சக்கணக்கான மரங்கள் நடப்படுகிறது என்றார் . பள்ளி முதல்வர் சவும்யா, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.