ADDED : ஆக 08, 2025 02:00 AM

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம்அய்யம்பாளையம் வி.ஏ.ஓ.,வாக நிலக்கோட்டை பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் 47, பணிபுரிந்தார். அவரிடம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி கார்த்திகேயன் 37, தன் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்ற விண்ணப்பித்திருந்தார். ரூ.3000 லஞ்சம் கொடுக்காததால் மூன்று முறை அவரது விண்ணப்பத்தை வி.ஏ.ஓ., தள்ளுபடி செய்தார். இதனால் ரூ. 2500 லஞ்சம் கொடுப்பதாக கூறிய கார்த்திகேயன் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தார்.
நேற்று ரசாயனம் தடவிய ரூ. 2500க்கான ஐந்து ரூ.500 நோட்டுகளை வி.ஏ.ஓ.,விடம் கார்த்திகேயன் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.