ADDED : ஜன 16, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை வி.ஏ.ஓ., அலுவலகம் பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டு வந்தது. ஓட்டு கூரை கட்டடமான இது 2007ல் பெய்த கனமழையால் சேதமாக வடக்கு ரத வீதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இப்பகுதி சிறுநீர் கழிக்கும் பகுதியாக பயன்படுத்தப்படும் நிலையால் துர்நாற்றம் வீசியது. சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படும் நிலையும் இருந்தது.
இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்த குப்பை அகற்றப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரும்பு கதவு பொருத்தி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்த பிரச்னைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

