/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம்
/
வீடு, கோவில்களில் வரலட்சுமி விரதம்
ADDED : ஆக 09, 2025 03:49 AM
திண்டுக்கல்: வரலட்சுமி நோன்பையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து வீட்டில் பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைப்பிடித்தனர்.
அபிராமி அம்மன், கோட்டை மாரியம்மன், வெக்காளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பக்தர்கள் கூட்டத்துடன், வரலட்சுமி விரதம் இருந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வீட்டில் வரலட்சுமி விரத பூஜை மேற்கொள்ள முடியாத சுமங்கலி பெண்கள், வளையல், குங்குமம், பூ உள்ளிட்டவற்றை கோயில்களில் அம்மனுக்கு படைத்து பக்தி பரவசத்தோடு வழிப்பட்டு விரதம் முடித்தனர்.
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. முன்னதாக திருமஞ்சன அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருவிளக்கு பூஜை, மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், வரலட்சுமி நோன்பு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
-