/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வத்திபட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
/
வத்திபட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 06, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: வத்திபட்டி கே.கே. நகர் வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாகுதி கணபதி ஹோமம் ,முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கபட்டது.