/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் அச்சம்
/
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் அச்சம்
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் அச்சம்
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வெடிகுண்டு மிரட்டலால் அச்சம்
ADDED : அக் 18, 2024 03:21 AM

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மதுரை போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.
நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார், தலைமையில் போலீசார் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள், பயணிகள், கடை வைத்திருப்போர் என அனைவரையும் வெளியேற்றினர். பஸ்கள் வரும் பாதையை அடைத்த போலீசார் பஸ்ஸ்டாண்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்ததில் மதுரையை சேர்ந்த இளைஞரின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதியானதால் அதிகாலை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இருந்த பதட்டமான நிலையிலிருந்து வெளிவந்து போலீசார் நிம்மதி அடைந்தனர். இதன் பின் பாதை திறக்க பஸ் ஸ்டாண்ட் வழக்கம்போல் செயல்பாட்டிற்கு வந்தது.