/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிறைகள் அதிகம் இருந்தாலும் சிறு குறைகளே பேசு பொருளாகுது அதிகாரிகளை 'அலர்ட்' செய்த வேடசந்துார் எம்.எல்.ஏ.,

ADDED : ஜூலை 29, 2025 12:56 AM

வடமதுரை: ''அரசின் திட்டப் பணிகள் அதிகம் நடந்திருந்தாலும் எங்காவது குறையாக விடப்படும் விஷயமே மக்களிடம் பேசு பொருளாக மாறும் என்பதால் திட்டப் பணிகள் நடக்கும் இடங்களில் குறைகள் இல்லாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ள வேண்டும்'' என  வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார்.
வடமதுரை ஒன்றியம் பிலாத்து நால்ரோடு - மூக்கரபிள்ளையார் கோயில் வரை நபார்டு திட்டத்தில் ரூ.1.59 கோடி,  வேங்கனுார், தங்கம்மாபட்டி, முடக்குப்பட்டி பகுதிக்கு ரூ.80 லட்சம் என  ரோடுகள் புதுப்பிக்கவும், அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கூடுதல் கட்டடம் கட்ட ரூ.75 லட்சம்  ஒதுக்கப் பட்டுள்ளது.
இப்பணிகளை  துவக்கி வைத்து காந்திராஜன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
மோளப்பாடியூர் வழியே செல்லும் ஒரு முக்கிய ரோடு தற்போது ஒன்றிய நிர்வாகத்திடம் இருந்து நெடுஞ்சாலைத்துறை வசம் மாறியுள்ளது.
இப்பகுதியில் திண்டுக்கல் ஒன்றிய எல்லைப் பகுதி வரை 300 மீட்டர் துார ரோட்டை அத்துடன் சேர்த்து மாற்றம் செய்யாமல் அதிகாரிகள் விட்டுள்ளனர்.
இதை தனியே சீரமைப்பில் பல சிக்கல்கள் ஏற்படும். இப்பகுதியில் ரூ.3 கோடிக்கு அதிகமான தொகையில் ரோடு புதுப்பித்தல் நடக்க இருந்தாலும்  விடப்பட்ட குறைந்த துார சேதமான ரோடு மக்களை பாதிக்கும்.
இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்க கூடாது.  நிறைகள் எவ்வளவோ இருந்தாலும் குறைகளே மக்களிடம் பேசு பொருளாக மாறும் என்றார்.
அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன்,  துணைத் தலைவர் செந்தில்,  செயல் அலுவலர் பத்மலதா,  தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி,  அவைத்தலைவர் முனியப்பன்,  வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.