/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் குறைந்தது காய்கறி விலை
/
ஒட்டன்சத்திரத்தில் குறைந்தது காய்கறி விலை
ADDED : ஜன 15, 2025 12:38 AM
ஒட்டன்சத்திரம்; தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் குறைந்த அளவே கொள்முதல் செய்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் கொள்முதல் செய்யும் அளவை மிகவும் குறைத்து விட்டதால் காய்கறி விலை 2 நாட்களாக வீழ்ச்சி அடைந்தது.
இரு நாட்களுக்கு முன் கிலோ ரூ.140 க்கு விற்ற முருங்கைக்காய் 100, ரூ. 30 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25 , ரூ. 8 க்கு விற்ற சுரைக்காய் ரூ.3, ரூ.35 க்கு விற்ற பச்சைப் பயறு ரூ.25, ரூ.32 க்கு விற்ற பீட்ரூட் ரூ.25, ரூ. 65க்கு விற்ற அவரைக்காய் ரூ. 50, ரூ.25 க்கு விற்ற புடலங்காய் ரூ.18 க்கு விற்பனை ஆனது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்தே காணப்பட்டது.