/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வீழ்ச்சியடைந்த காய்கறிகள் விலை
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வீழ்ச்சியடைந்த காய்கறிகள் விலை
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வீழ்ச்சியடைந்த காய்கறிகள் விலை
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வீழ்ச்சியடைந்த காய்கறிகள் விலை
ADDED : ஏப் 25, 2025 01:47 AM
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கை, வெண்டை, கத்தரி உட்பட பல காய்கறி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் சுற்றுபபகுதிகளில் காய்கறிகள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில நாட்களாக உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் குறைந்த அளவே கொள்முதல் செய்வதால் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
கிலோ ரூ.28 விற்ற கரும்பு முருங்கை ரூ.20 , ரூ.26 க்கு விற்ற செடி முருங்கை ரூ.18 , ரூ.15 க்கு விற்ற மரம் முருங்கை ரூ.10 க்கு விற்பனையானது. இதே போல் ரூ.15 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.12 , ரூ.2 க்கு விற்ற சுரைக்காய் ரூ.1.50 , ரூ.47 க்கு விற்ற சேனைக்கிழங்கு ரூ.40 , ரூ.15 க்கு விற்ற டிஸ்கோ கத்தரிக்காய் ரூ.5 க்கு விற்பனையானது. காய்கறி விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், பல ஊர்களில் காய்கறிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் வியாபாரிகள் மார்க்கெட் வராமல் அதன் அருகிலே கொள்முதல் செய்து விடுவதால் விலை குறைந்துள்ளது '' என்றார்

