/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு
/
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு
ADDED : ஏப் 13, 2025 03:35 AM

ஒட்டன்சத்திரம்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்தது.
ஒட்டன்சத்திரம் சுற்றுப்புற கிராமப்பகுதிகள், பக்கத்து மாவட்டங்களில் பயிரிடப்படும் காய்கறிகள் இங்குள்ள மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதில் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
மீதம் உள்ளவை தமிழகத்தில் இதர பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது .
வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில் திங்களன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று வார விடுமுறையாக இருந்த போதிலும் மார்க்கெட் செயல்பட்டது.
காய்கறி வரத்து அதிகமாக இருந்தது. வியாபாரிகள் அதிகமாக காய்கறிகளை கொள்முதல் செய்ததால் விலை அதிகரித்திருந்தது. இருநாட்களுக்குமுன் கிலோ ரூ.7 க்கு விற்ற கரும்பு முருங்கை நேற்று ரூ. 17, ரூ.23 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ. 40, ரூ.30க்கு விற்ற அவரைக்காய் ரூ.35, ரூ.13க்கு விற்ற புடலங்காய் ரூ.22, ரூ.20க்கு விற்ற பீன்ஸ் ரூ.30க்கு விற்பனை ஆனது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில் ''தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விலை ஏற்றம் அடைந்துள்ளது'' என்றார்.