/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிலோ ரூ.10 க்கும் கீழ் விற்கும் காய்கறிகள் பாதிப்பு மேல் பாதிப்பு; பறிக்காமல் செடிகளிலே விடும் விவசாயிகள்

ADDED : மார் 26, 2025 05:00 AM

மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், கத்தரிக்காய், பீட்ரூட் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது. தேவைக்கு அதிகமாக வரத்து உள்ளதால் விலை படு வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
நடவு, காப்பு ,அறுவடை என ஒவ்வொரு நிலையிலும் காய்கறிகளை பயிர் செய்ய செலவு அதிகமாகிறது. இதனால் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.3 முதல் ரூ.7 , முருங்கைக்காய் கிலோ ரூ.7, பீட்ரூட் ரூ.4, சுரைக்காய் ரூ.2, கத்தரிக்காய் ரூ.7 க்கு விற்பனை ஆனது. இன்னும் பல காய்கறிகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாகும் போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய தமிழக அரசு தானே கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்தது.
அதே நேரம் விலை வீழ்ச்சியாக இருக்கும் போது விவசாயிகளை காக்க இவ்வாறு செய்வதில்லை. இதனால் காய்கறிகளுக்கு நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். பல தோட்டங்களில் தக்காளி செடிகளில் பறிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. காய்கறி உற்பத்தி வீழ்ச்சி அடையும்போது தான் விலை அதிகரித்து காணப்படுகிறது. விலை அதிகரிக்கும் போது ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயனடைகின்றனர்.
ஆனால் விலை வீழ்ச்சியின் போது பல விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். விலை வீழ்ச்சியின் போது பயிர்களுக்கு மானியம் அறிவித்து விவசாயிகளை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.