/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் நாள் முழுவதும் பனி பொழிவு முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்ற வாகனங்கள்

ADDED : நவ 28, 2024 06:19 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நாள் முழுவதும் ஏற்பட்ட அதிக பனிப்பொழிவின் காரணமாக நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ,அதிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டதுடன் காணப்பட்ட நிலையில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது.
ரோடுகள் புகைமூட்டம் போல் காட்சியளிக்க முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். நான்கு வழிச்சாலைகளில் வாகனப்போக்குவரத்து எப்போதும் அதிகளவில் இருக்கும் நிலையில் திண்டுக்கல் வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சென்றன.
நேற்று நாள் முழுவது காணப்பட்ட பனிப்பொழிவின் காரணமாக கடும் குளிர் நிலவ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.