/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் இ-பாஸ் கெடுபிடி ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
/
கொடைக்கானலில் இ-பாஸ் கெடுபிடி ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கொடைக்கானலில் இ-பாஸ் கெடுபிடி ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
கொடைக்கானலில் இ-பாஸ் கெடுபிடி ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
ADDED : நவ 09, 2024 11:09 PM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவுப்படி இ--பாஸ் சோதனை தீவிரபடுத்தப்பட்டதால் வெள்ளிநீர் வீழ்ச்சி முதல் டைகர்சோலை வரை அரை கி.மீ., துாரத்திற்கு ஒரு மணி நேரம் வாகனங்கள் காத்திருந்து சென்றன.
கொடைக்கானல், ஊட்டி செல்லும் வாகனங்களுக்கு கட்டாயமாக இ-பாஸ் சோதனையை நடைமுறைப்படுத்த வேண்டும். இ--பாஸ் இல்லாமல் அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவையடுத்து நேற்று காலை கொடைக்கானல் வந்த வாகனங்கள் வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. அதே இடத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கொண்டு செல்கிறார்களா என சுகாதாரத்துறையினரும் சோதனை செய்தனர். 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் பெருமாள்மலை முதல் டைகர்சோலை வரை அரை கி.மீ., துாரத்திற்கு ஒரு மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இவ்விரு சோதனைகளும் வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனை சாவடி பகுதியில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை பெருமாள்மலைப் பகுதிக்கு மாற்றினால் அங்கு ரோடு அகலம் என்பதால் வாகன நெரிசல் ஏற்படாது. சோதனைச்சாவடியை பெருமாள் மலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானல் மக்கள் தெரிவித்தனர்.