/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு கூடுதலான வாகனங்கள் தடை அமல்
/
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு கூடுதலான வாகனங்கள் தடை அமல்
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு கூடுதலான வாகனங்கள் தடை அமல்
கொடைக்கானலில் 12 மீட்டருக்கு கூடுதலான வாகனங்கள் தடை அமல்
ADDED : நவ 23, 2024 06:50 AM

திண்டுக்கல்; கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள், சீசன் காலங்களில் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க மே 7 முதல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. நீளமான வாகனங்கள்,சரக்கு வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நவ.18 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் ரோட்டில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கின்றனர். சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களை அளந்து பார்க்கின்றனர். 12 மீட்டருக்கு மேல் இருந்ததால் திருப்பி அனுப்புகின்றனர்.