/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிடப்பில் கால்நடை மருத்துவ நிலையம்: விவசாயிகள் விரக்தி
/
கிடப்பில் கால்நடை மருத்துவ நிலையம்: விவசாயிகள் விரக்தி
கிடப்பில் கால்நடை மருத்துவ நிலையம்: விவசாயிகள் விரக்தி
கிடப்பில் கால்நடை மருத்துவ நிலையம்: விவசாயிகள் விரக்தி
ADDED : நவ 02, 2025 04:01 AM
வடமதுரை: தும்மலக்குண்டில் நடவடிக்கையின்மையால் புதிய கால்நடை மருத்துவ நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
வடமதுரை பேரூராட்சி பகுதிகளான தும்மலக்குண்டு, உடையாம்பட்டி, சீத்தப்பட்டி, தேவர்களம், பி.கொசவபட்டி ஊராட்சி சார்ந்த பாப்பிநாயக்கன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் விவசாயம் கேள்விக்குறியாக மாறிவரும் நிலையில் பலரும் கால்நடை வளர்ப்பை அதிகளவில் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் வடமதுரைக்குரிய கால்நடை மருந்தகம் வெள்ளபொம்மன்பட்டி அருகில் திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியினர் கால்நடைகளை மருந்தகத்திற்கு அழைத்து சென்று திரும்புவதில் கடும் சிரமம் உள்ளது. எனவே கால்நடை மருந்தக கிளை நிலையத்தை தும்மலக்குண்டில் புதிதாக துவங்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
இதற்கு கால்நடை பராமரிப்பு துறையினர் அனுப்பிய பதிலில், தும்மலக்குண்டில் புதிய கால்நடை கிளை நிலையம் அமைக்க சாத்தியகூறு உள்ளது. கிராமத்தில் இடம், நிதி ஒதுக்கீடு கிடைத்தால் கிளை நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தொடர் நடவடிக்கை இன்றி கிடப்பில் உள்ளது.

