/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் பராமரிப்பற்ற சமூக நீதி விடுதி பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் மாணவர்கள்
/
சின்னாளபட்டியில் பராமரிப்பற்ற சமூக நீதி விடுதி பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் மாணவர்கள்
சின்னாளபட்டியில் பராமரிப்பற்ற சமூக நீதி விடுதி பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் மாணவர்கள்
சின்னாளபட்டியில் பராமரிப்பற்ற சமூக நீதி விடுதி பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் மாணவர்கள்
ADDED : நவ 02, 2025 04:03 AM

சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி அரசு சமூக நீதி விடுதி சுற்றுச்சுவர் சேதமடைந்த சூழலில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
சின்னாளபட்டியில் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே கருணாநிதி ரோட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான அரசு சமூக நீதி விடுதி உள்ளது.
சுற்றிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி ஆடலுார், பன்றிமலை, தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த மலைக்கிராம மாணவர்கள் பலர் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.
விடுதியின் கட்டடம், சுற்றுச்சுவர் 30 ஆண்டு களுக்கு முன் கட்டப் பட்டது. போதிய பராமரிப்பின்றி சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல்களுடன் சேதம் அடைய துவங்கியது.
இதனை சீரமைக்கவோ பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதில் தொய்வு நிலவியது. இதையடுத்து பல இடங்களில் விரிசல்களுடன் சுவர் சேதம் அடைந்து விழுந்துள்ளது.
தெரு நாய்கள், கால்நடைகள் என விலங்குகள் மட்டுமின்றி அடிக்கடி வெளி நபர்கள் நடமாட்டமும் கட்டுப்பாடின்றி தாராளமாக உள்ளது.
போதிய பாதுகாப்பற்ற சூழலில் பராமரிக்கப்படும் அவல நிலை உள்ளதாக மாணவர்களும் புலம்புகின்றனர்.
இதனை சீரமைத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாதுகாப்பு இல்லை மனோகரன், பா.ஜ., ஆத்துார் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர்: சின்னாளபட்டியை சுற்றிய கிராமங்களை தவிர ஏராளமான மலைக் கிராம மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். உணவு, சுகாதார சூழல் சார்ந்த பிரச்னைகள் உள்ளன.
அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை. தற்போது தெருநாய்கள், கால்நடை, வெளி நபர்கள் வந்து செல்லும் வகையில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் இப்பிரச்னைகள், பெற்றோரிடம் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.
கண்காணிப்பில் அலட்சியம் கார்த்திகேயன், விவசாயி, பெருமாள் கோயில்பட்டி: போக்குவரத்து வசதி சார்ந்த பிரச்னைகளால் அரசு துறைகள் நடத்தும் விடுதிகள் பெரும் உதவியாக உள்ளது.
இருப்பினும் இதனை பராமரித்தல் வசதிகள் அளித்தல், கண்காணிப்பில் உயர் அதிகாரிகள் அலட்சியத்தால் பின் னடைவு நீடிக்கிறது.
விடுதி காப்பாளர் கூடுதல் பொறுப்பு நிலையில் உள்ளதால் பிற விடுதிகளையும் கவனித்து வருகிறார். சுகாதார, உணவு தர பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தபோதும் பலனில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

