/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகள், மாணவர்களுக்கு தொல்லை தரும் வாணிக்கரை ரோடு
/
விவசாயிகள், மாணவர்களுக்கு தொல்லை தரும் வாணிக்கரை ரோடு
விவசாயிகள், மாணவர்களுக்கு தொல்லை தரும் வாணிக்கரை ரோடு
விவசாயிகள், மாணவர்களுக்கு தொல்லை தரும் வாணிக்கரை ரோடு
ADDED : நவ 02, 2025 04:04 AM

குஜிலியம்பாறை: செங்குளத்துப்பட்டி பிரிவில் இருந்து வாணிக்கரை செல்லும் 2 கி.மீ., தார் ரோடு சேதமடைந்துள்ளதால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி பிரிவில் இருந்து வாணிக்கரை பிரிவு செல்லும் 2 கி.மீ., தார் ரோடு மெட்டல் ரோடாக மாறிவிட்டது.
இந்த ரோட்டின் வழியாகத்தான் செங்குளத்துப்பட்டி, செங்குளத்துப்பட்டி காலனி, கருங்குளம், வண்ணானுார், ராமநாயக்கனுார் உள்ளிட்ட சுற்று பகுதி மக்கள், வேடசந்துார் செல்ல வேண்டும்.
இந்த பகுதி மக்களின் முக்கிய ரோடான இது அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட நிலையில் தற்போது கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக நடப்பதற்கே பயனற்றுள்ளது. இந்த வழியாக தான் வேடசந்துார் செல்வதற்கான தனியார் பஸ், பால் வண்டி, நுாற்பாலை வாகனங்கள், பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் கூடுதலான மக்கள் விவசாயிகளாக உள்ளதால் விளை பொருட்களை டூவீலர்களில் வார சந்தைகளுக்கு இந்த வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர்.இப்பகுதி மக்களுக்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்று உள்ளதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தேர்தல் வருவதற்குள் இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
நடவடிக்கை இல்லை ஆர்.பூபதி, சமூக ஆர்வலர், செங்குளத்துப்பட்டி: செங்குளத்துப்பட்டியில் இருந்து வாணிக்கரை வழியாக வேடசந்துார் செல்வதற்கான மிக முக்கியமான ரோடு இதுதான்.
இந்த ரோட்டின் வழியாகத்தான் செங்குளத்துப்பட்டி, கருங்குளம், வண்ணானுார், ராமநாயக்கனுார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் வேடசந்துார் சென்று வருகின்றனர்.
தனியார் பஸ், பால் வேன், நுாற்பாலை வேன்களும் சென்று வருவதில் சிரமம் அடைகின்றனர். இந்த ரோட்டை புதுப்பிக்க கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரியும் நடவடிக்கை இல்லை.
நடப்பதற்கே பயனற்றது வி.கோபால்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்: ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி: இந்த ரோடு முதன் முதலில் 2006--11 ல் காங்., எம்.எல்.ஏ., தண்டபாணி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் போடப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால் கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்று உள்ளது.
வணிக்கரை பிரிவு என்ற இடத்தில் வாணிக்கரை ஊராட்சி, ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி, பாலப்பட்டி ஊராட்சி என மூன்று ஊராட்சிகள் சங்கமிக்கும் முக்கிய இடமாகும்.
இந்த ரோடு சேதத்தால் சுற்றுப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றார்.

