ADDED : நவ 02, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. மாவட்ட செயலாளர் பரசுராமன் தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட செயலாளர் நாகேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து, வன்னியர் சங்க ஒருங்கிணைந்த மாவட்டத்தலைவர் வெள்ளை கோபால் முன்னிலை வகித்தனர்.வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை மாநிலத்தலைவர் கோபு, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சசிக்குமார் பேசினர்.
முன்னாள் மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர்கள் நாகரத்தினம், நிர்மலா ஞானசவுந்தரி கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

