/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரவுடியை ஹீரோவாக சித்தரித்து வீடியோ
/
ரவுடியை ஹீரோவாக சித்தரித்து வீடியோ
ADDED : ஆக 15, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல் இடையே மோதல் உள்ளது. இதில் பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். இதன் பின் தொடர் கொலைகள் நடைபெற்றது.
இந்நிலையில் திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த யோகேஸ்வரன் 25 , இளைஞர் பட்டறை சரவணன் புகைப்படங்களை ஹீரோவாக சித்தரித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட வேகமாக பரவியது. இதை தொடர்ந்து போலீசார் யோகேஸ்வரனை கைது செய்தனர்.