/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
80 அடி ஆழ ரயில் பாதையில் மழையால் கண்காணிப்பு தீவிரம்
/
80 அடி ஆழ ரயில் பாதையில் மழையால் கண்காணிப்பு தீவிரம்
80 அடி ஆழ ரயில் பாதையில் மழையால் கண்காணிப்பு தீவிரம்
80 அடி ஆழ ரயில் பாதையில் மழையால் கண்காணிப்பு தீவிரம்
ADDED : அக் 18, 2024 03:07 AM

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரை அருகே 80 அடி ஆழத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் மழையால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - திண்டுக்கல் இடையே இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதையில் கல்பட்டிசத்திரம் -அய்யலுார் இடையே இரண்டு இடங்கள் மேடாக இருந்தது. இன்ஜின்கள் சரக்கு பெட்டிகளை இழுக்க முடியாமல் திணறியதுடன் கூடுதல் எரிபொருள் செலவு, தண்டவாள தேய்மானம் ஏற்பட்டது.
இப்பிரச்னையை தீர்க்க 1998ல் அகலப்பாதையாக மாற்றும் பணி நடந்தபோது பழைய தடத்திற்கு பதிலாக குமரம்பட்டியை சுற்றி 5.5 கி.மீ., துாரம் புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டது. இதற்காக இங்கு 150 அடி அகலம், 80 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி ரயில் பாதை அமைக்கப்பட்டது. ரயில் பாதைக்கு மேலே நீர் வழிப்பாலங்களும், ரயில் பாதை மட்டத்தில் ஓடை செல்லுமிடங்களில் நீர்வழி புதைப் பாலங்களும் உள்ளன.
சில நாட்களுக்கு முன் தங்கம்மாபட்டி பகுதி ரயில் பாதையில் பெருக்கெடுத்த நீரால் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் அரிக்கப்பட்டு ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.
வடகிழக்குபருவ மழையால் தண்டவாளப் பகுதிக்குள் கற்கள் விழுதல், நீர் புகுதல் போன்றவற்றை கண்காணிக்கப்பதற்காக மேலும் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். அதிக கவனத்துடன் ரயில்களை இயக்கும்படி டிரைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.