sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்று கறுப்பு பணத்தில் புரளும் விஜய்; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பாய்ச்சல்

/

 பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்று கறுப்பு பணத்தில் புரளும் விஜய்; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பாய்ச்சல்

 பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்று கறுப்பு பணத்தில் புரளும் விஜய்; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பாய்ச்சல்

 பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்று கறுப்பு பணத்தில் புரளும் விஜய்; முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பாய்ச்சல்


ADDED : பிப் 02, 2026 04:47 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: ''த.வெ.க., தலைவர் விஜய் தனது திரைப்படங்களின் ரூ.200க்கான டிக்கெட்டுகளை ரூ.2000 வரை கள்ளச்சந்தையில் விற்பதால் கிடைக்கும் வருமானம் எங்கே போகிறது என்பதை கூற வேண்டும்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: புதிதாக த.வெ.க., கட்சியை துவக்கிய நடிகர் விஜய் தருவது பயங்கர 'பில் டப்'பாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. எம்.ஜி.ஆர்., கட்சியை துவக்கி பல ஆண்டுகள் உழைத்து ஆட்சியை பிடித்தார். ஆனால் விஜய் கட்சி துவங்கிய உடனே தானே முதல்வர், மற்ற கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என அளந்து விடுகிறார். இடையில் காங்., கட்சியுடன் த.வெ.க., கூட்டணி என கட்டுக்கதையை கிளப்பினர். ஆனால் காங்., தலைவர்கள் தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என தெளிவாக கூறிவிட்டனர்.

மூன்று நாட்களுக்கு முன்னர் வரை த.வெ.க.,வை அ.தி.மு.க., விமர்சிக்கவில்லை. அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என்றதால் நாங்களும் த.வெ.க., குறித்து விமர்சிக்கிறோம். விஜய் படங்களில் நடித்ததற்கு சம்பளம் எவ்வளவு, அதில் வரி கட்டிய வெள்ளை பணம் எவ்வளவு, வரி கட்டாத கறுப்பு பணம், மீதம் எங்குள்ளது. ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2000 வரை கள்ளச்சந்தையில் விற்கும் பணம் எங்கே போகிறது.

கரூர் நெரிசலில் பலியானோர் குடும்பங்களை பனையூர் அழைத்தது எல்லாம் பணத்திமிர். அங்கு 'கிளிசரின்' பயன்படுத்தி அவர் கண்ணீர் விட்டிருக்க வாய்ப்புள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் மிக குறைவு. அவரிடம் ஏராளமான கோடிகள் பணம் இருக்கும் நிலையில் ரூ.1 கோடி முதல் ரூ.2.50 கோடி வரை தந்திருக்கலாம். ஆளுங்கட்சியான தி.மு.க.,வையே விஜய் விமர்சிக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம் என, விஜயிடம் அவரது கட்சியினர் தெரிவிக்க வேண்டும் என கடுமையாக பேசினார்.






      Dinamalar
      Follow us