sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ‛'கொடை'யில் தடையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம்; காற்றில் பறக்கும் வருவாய்த்துறை எச்சரிக்கை

/

 ‛'கொடை'யில் தடையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம்; காற்றில் பறக்கும் வருவாய்த்துறை எச்சரிக்கை

 ‛'கொடை'யில் தடையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம்; காற்றில் பறக்கும் வருவாய்த்துறை எச்சரிக்கை

 ‛'கொடை'யில் தடையை மீறி இயந்திர பயன்பாடு தாராளம்; காற்றில் பறக்கும் வருவாய்த்துறை எச்சரிக்கை


ADDED : பிப் 02, 2026 04:47 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் வருவாய்த்துறையினர் எச்சரிக்கையும் மீறி சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயந்திர பயன்பாடுகள் தொடர்கின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைத்தள பாதுகாப்பு விதிமுறைகளின் படி போர்வெல், கம்ப்ரசர், மண் அள்ளும் இயந்திரம், பாறை தகர்ப்பு உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகளுக்கு வருவாய்த்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனா ல் மலைப்பகுதிகளையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க சில அதிகாரிகள் ஒத்துழைப்பது இல்லை. இதனால் இரவு, பகலாக இயந்திர பயன்பாடு தாராளமாக நடக்கிறது.

ஆளும் கட்சியினரின் அழுத்தம், கீழ்நிலை ஊழியர்கள் சரியில்லை எனக்காரணம் கூறி வருவாய்த்துறை உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப்படுகிறது என இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்தாண்டு ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு அறிக்கையில், ' சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக வணிக ரீதியாக மண்வளம், இயற்கை சிதைக்கப்படுவதாக புகார் உள்ளது. இதன் அடிப்படையில் மண் அள்ளும் இயந்திரம், போர்வெல், கம்ப்ரசர், பாறை தகர்ப்புக்கு தடை உள்ளது.

ஜூன் 30க்குள் இத்தகைய கனரக வாகனங்களை மலைப்பகுதியில் இருந்து தரைப்பகுதிக்கு இறக்க வேண்டும். மீறும் பட்சத்தில் ஜூலை 1 முதல் வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் அப்சர்வேட்டரி குடியிருப்புப் பகுதியில் வெடி வைத்து பாறை தகர்த்த சம்பவத்தை தொடர்ந்து ஜன.,31க்குள் இயந்திரத்தை இறக்க வேண்டும்; இல்லையெனில் பிப்..1ல் பறிமுதல் என மீண்டும் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.

வருவாய்த்துறை அதிகாரி கூறுகையில், நகரில் உள்ள இயந்திர பயன்பாட்டு வாகனங்கள் குறித்த விபரங்களை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளோம். அவை பணிகள் செய்ய அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி இயக்கினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி மலைப்பகுதியில் உள்ள வாகனங்களை தரைப்பகுதிக்கு இறக்குவதற்கு வி.ஏ.ஓ.,க்கள் 'ஸ்டிரைக்' தொடர்வதால் தாமதமாகிறது' என்றார்.






      Dinamalar
      Follow us