/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தன்னை முதல்வராக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவதால் விஜய் கூட்டணிக்கு வரமாட்டார்: சொல்கிறார் ராம சீனிவாசன் சொல்கிறார் ராம சீனிவாசன்

ADDED : ஜூன் 16, 2025 05:25 AM
திண்டுக்கல்: ''தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜயை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இதனால் விஜய் பா.ஜ., கூட்டணிக்கு வரமாட்டார்,'' என, திண்டுக்கல்லில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன் நாட்டின் வளர்ச்சி பின்தங்கியிருந்தது. கடந்த 11 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் சாலை போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, டிஜிட்டல்மயம் என நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. ஜல்ஜீவன், பிரதமர் வீடு கட்டும் திட்டம் என மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
மத்திய, மாநில அரசுகளுக்கென்று தனித்தனி ஆட்சி வரையறை, பொறுப்புகள் உள்ளன. பா.ஜ.,வை ஆளவிடமாட்டோம் என இங்கிருப்பவர்கள் சொல்ல முடியாது. பிரதமர் மோடி நாட்டை ஆள்கிறார். முதல்வர் ஸ்டாலின் அவரின் அதிகார வரம்புக்கு உட்பட்டு தமிழகத்தை ஆள்கிறார். ஸ்டாலினுக்கு தமிழகத்தையே ஆள தெரியவில்லை. நெல் கொள்முதல்முதல் தெருநாய்களை கட்டுப்படுத்துவது வரை மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி தருகிறது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என தமிழக ஆட்சியாளர்கள் பொய் சொல்கிறார்கள்.
அரசியல் கட்சி துவங்கியகாலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டார்ச்லைட் வைத்து நீதி தேடினார். ஆனால் தற்போது நாம் தான் டார்ச்லைட் அடித்து அந்த மானஸ்தன் எங்கே என கமலை தேட வேண்டும்.
மற்ற இடங்களிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளை விட மதுரையில் கட்டப்படும் எய்ம்ஸ் பெரியது. குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.
'இண்டியா' கூட்டணியில் ஒன்றாக இருக்கும் கம்யூ., காங்., கேரளாவில் எதிரெதிர் துருவங்காளாக அரசியல் செய்கின்றன. இங்கு ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்பவர்கள்; கேரளாவில் தனித்தனியாக ஒருவரையொருவர் விமர்சித்து ஓட்டுக்கேட்பார்கள். இப்படிப்பட்ட வித்தியாசமான அரசியலை இவர்களை தவிர வேறு யாரும் செய்யமுடியாது.
கூட்டணி ஆட்சிக்கும், கூட்டணி கட்சிகளின் ஆட்சி என்று சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு. பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளின் அரசு எனக்கூறுவது வழக்கம். அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை அறிவித்த மத்தியமைச்சர் அமித்ஷாவும் இதைத்தான் கூறியுள்ளார்.