sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


ADDED : அக் 03, 2024 06:11 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்களாக தெரிவித்தனர்.

ஆத்துார் பாளையங்கோட்டையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்று பேசியதாவது: ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டது.

கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் வரவு செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தல் வளர்ச்சிக்கு ஏற்றது திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் கிராம சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு நிதி, முழுமையாக சரியான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விவாதிக்கும் இடமாக உள்ளது. செலவின ஒப்புதல் மட்டுமின்றி துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள், ஜல்ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கலாம். அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து அவற்றை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தலைவர் நாகலட்சுமி தலைமை வகித்தார். துாய்மை பாரத இயக்க பணியாளர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சதீஸ்பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் நாகராஜன், ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி பங்கேற்றனர்.

பழநி : சி.கலையமுத்துார், கோதைமங்கலம், சிவகிரிபட்டி ஊராட்சிகளில் நடந்தது.

அய்யம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் பங்கேற்று பேசுகையில், காவிரி கூட்டணி குடிநீர் திட்டம் அமராவதி கூட்டு குடிநீர் திட்டம் இரண்டு திட்டங்கள் இப்பகுதிக்கு நிறைவேற்றப்பட உள்ளது.

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்திற்கு 2 பயனாளிகள் அய்யம்பாளையத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீட்டு மனை பட்டா வைத்துள்ள நபர்கள் கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்றார். ஊராட்சி ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, சப் கலெக்டர் கிஷன் குமார், பி.டி.ஓ., கண்ணன் பங்கேற்றனர்.

வடமதுரை: பி.கொசவபட்டி ஊராட்சி சிக்குபோல கவுண்டன்பட்டியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை மண்டல அலுவலர் ரவீந்திரன், ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம் ஆண்டறிக்கை வாசித்தார்.

ஊராட்சி தலைவர் நாராயணன், துணை தலைவர் துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமி இளங்கோ, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நிர்வாகிகள் பாண்டி, கணேசன், கருப்பன், சொக்கலிங்கம், அன்பழகன், ஜீவானந்தம் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழியை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

ஆர்.கோம்பை: ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

ஊராட்சி தலைவர் மலர்வண்ணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கரோலின் மேரி முன்னிலை வகித்தனர். துாய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.

*வில்பட்டி ஊராட்சியில் கிராம சபா கூட்டம் தலைவர் பாக்யலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வாசு, பி.டி.ஓ., பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொடைக்கானல் நகராட்சியுடன் வில்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us