/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆடி அமாவாசை விழா பூஜை பிரச்னை பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு செய்த கிராமத்தினர்

ADDED : ஜூலை 09, 2025 08:44 AM
ஆத்துார் : சடையாண்டி கோயில் ஆடி அமாவாசை விழா பூஜை அவகாசம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்த ஒரு தரப்பினர் பாதியிலே வெளிநடப்பு செய்தனர்.
செம்பட்டி அருகே அக்கரைப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை குகையில் சடையாண்டி கோயில் உள்ளது. ஆடி அமாவாசையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து 200 அடி உயரத்தில் உள்ள மூலவரை வழிபடுவது வழக்கம்.
இக்கோயிலில் பூஜை செய்வது தொடர்பாக ஆத்துார், அக்கரைப்பட்டி கிராமத்தினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்தாண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 24ல் நடக்க உள்ள நிலையில் பூஜை தொடர்பாக இரு கிராமத்தினர் இடையே பேச்சுவார்த்தை ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் முத்துமுருகன், எஸ்.ஐ., பிரான்சிஸ் தீபா, ஹிந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சீனிவாசன் பங்கேற்றனர்.
ஆத்துாரை சேர்ந்த பூஜைதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக நேரம் ஒதுக்க வலியுறுத்தினர். அக்கரைப்பட்டி கிராமத்தினர் மறுத்ததால் ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
பூஜை தொடர்பாக வழக்கு விசாரணை ஜூலை 15ல் உயர்நீதிமன்றத்தில் நடப்பதால் அதன்பின் இறுதி முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. தீர்ப்பு தாமதமாகும் சூழலில் 2024 திருவிழா நடவடிக்கைகளை இந்தாண்டும் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்து அக்கரைப்பட்டி கிராமத்தினர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.