/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனப்பகுதியில் விதிமீறல் தடுப்பணை
/
வனப்பகுதியில் விதிமீறல் தடுப்பணை
ADDED : பிப் 20, 2026 05:56 AM

திண்டுக்கல்: கன்னிவாடி வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் விதிமீறல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதை மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் குழுவினர் , கலெக்டர்,ஆய்வு செய்தனர்.
கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பை அணைக்கு மேல் பகுதியில் குணசீலன் சொந்தமான பட்டா நிலத்தில் தடுப்பணை கட்டி உள்ளார்.
வனத்துறையின் அனுமதி இல்லாமல் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக எச்சரிக்கை நோட்டீசு அனுப்பிய வனத்துறையினர் பிப்.1ல் மாவட்ட வன அலுவலர் தலைமையில் வன அலுவலர்கள் இயந்திரங்கள் மூலம் தடுப்பணையை உடைக்கும் பணி மேற்கொண்டனர். இதனிடையே குணசீலன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றார்.
இதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் வீரகதிரவன், கலெக்டர் சரவணன் கன்னிவாடி கோம்பை அணைப்பகுதிக்கு சென்று தடுப்பணை குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது.
அதன்படி மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா தலைமையில் கலெக்டர் சரவணன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆர்.டி.ஓ.,திருமலை, வழக்கறிஞர் ஜெனரல் வீரகதிரவன், மேற்கு தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், கன்னிவாடி வனச்சரக அலுவலர் குமரேசன் ஆய்வு செய்தனர்.
அங்கு சென்ற ஆய்வுக்குழுவினரிடம் தடுப்பணையை அகற்றி, விவசாயத்துக்கு பயன்படும் வகையில் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் மனு அளித்தனர்.

