/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 28, 2025 07:58 AM
திண்டுக்கல்: ஹெல்ப்ஸ் அமைப்பு சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
செயலாளர் மரிய ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மரிய ப்ரீத்தி, முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் லாரன்ஸ், செவிலியர் சபிதா கலந்துகொண்டு பேசினர்.
இதில் பெண்களை இழிவுப்படுத்துதல், கேலி செய்தல், குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், கட்டாய கருக்கலைப்பு, பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. தங்கச்சி அம்மாபட்டி, களத்தூர், தோப்புப்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர். ஏற்பாடுகளை நிசித்ரா, பூங்கொடி, ஜீவா செய்திருந்தனர்.