/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வி.ஐ.பி., தரிசன டிக்கெட் பழனி கோவிலில் நிறுத்தம்
/
வி.ஐ.பி., தரிசன டிக்கெட் பழனி கோவிலில் நிறுத்தம்
ADDED : நவ 25, 2024 04:54 AM

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் தினமும் வருகின்றனர். இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களுக்கு கோவில் விடுதி அறைகள் ஒதுக்குவது, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலில் தரிசனம் செய்ய தொடர்பு கொள்ள, தண்டபாணி நிலையத்தில் பி.ஆர்.ஓ., அலுவலகம் உள்ளது.
இங்கே முக்கிய பிரமுகர் பரிந்துரையின் படி, 100 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடப்பதாக கூறி, நேற்று முன்தினம், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கட்சியினர், தண்டபாணி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து நேற்று, தண்டபாணி நிலைய அலுவலகம் முன், 'இங்கு தரிசன கட்டண சீட்டு வழங்கப்பட மாட்டாது' என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை முதல் தண்டபாணி நிலையத்தில் கட்டண சீட்டு வழங்கப்படவில்லை.