/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அகதிகள் முகாமில் வாலிபால் போட்டி: நாமக்கல் அணி வெற்றி
/
அகதிகள் முகாமில் வாலிபால் போட்டி: நாமக்கல் அணி வெற்றி
அகதிகள் முகாமில் வாலிபால் போட்டி: நாமக்கல் அணி வெற்றி
அகதிகள் முகாமில் வாலிபால் போட்டி: நாமக்கல் அணி வெற்றி
ADDED : அக் 02, 2024 07:02 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமில் தமிழன் விளையாட்டுக் கழகம் சார்பில் முகாம்களுக்கு இடையேயான மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.
மூன்று நாட்கள் இரவு பகல் நடந்த போட்டிகளில் தமிழகத்தில் உள்ள 10 அகதிகள் முகாமை சேர்ந்த 45 அணிகள் பங்கேற்றன. வத்தலக்குண்டு தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் துவக்கி வைத்தார்.
இறுதிப்போட்டியில் வத்தலக்குண்டு முகாம் அணி நாமக்கல் மாவட்டம் பரமத்தி முகாம் அணி மோதியதில் 15:11 என்ற புள்ளிகளில் நாமக்கல் பரமத்தி முகாம் அணி கோப்பையை கைப்பற்றியது.
வத்தலக்குண்டு ராயல் கால்பந்தாட்ட கழக தலைவர் சக்திவேல், ராயல் கூடை பந்தாட்ட கழக செயலாளர் முத்துப்பாண்டி, துணைச் செயலாளர் இளஞ்செழியன் பதக்கம் , கோப்பைகளை வழங்கினர். லண்டன் வாழ் தமிழர் கோகுல் சார்பில் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தமிழன் விளையாட்டு குழு நிர்வாகிகள் சேகர், உதயன், கஜேந்திரன் செய்திருந்தனர்.