/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் இறகுபந்து போட்டி
/
திண்டுக்கல்லில் இறகுபந்து போட்டி
ADDED : செப் 26, 2024 05:35 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிசினஸ் நெட்வொர்க்கிங் இன்டர்நேஷனல் இறகுபந்து போட்டிகள்,பாராட்டு விழா நடந்தது.உலகளாவிய வணிக இணைப்பு பரிந்துரைகளுக்காகவும் தொழில் முறை முன்னேற்றம், வணிகங்களுடன் உறவுகளை உருவாக்குவதற்காகவும் வணிக வலையமைப்புடன் 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பி.என்.ஐ. திண்டுக்கல் ஆரா நிறுவன அமைப்பின் சார்பாகவும் இதன் தொடர் சேப்டர்கள் அனைத்தும் இணைந்து திண்டுக்கல் மாநகரில் இதுவரை ரூ.150 கோடி வரை பி.என்.ஐ. பரிந்துரைகளின் மூலம் வணிகம் நடைபெற்றுள்ளது.அதற்கான பாராட்டு விழாவும்,உறுப்பினர்களுக்கான இறகு பந்து போட்டியும் நடந்தது.
இதில் மயில்வாகனன் மணிகண்டன் அணி முதலிடம், லோகோஷ், ஜித்தேஷ் அனி 2 ம் இடம், பாஸ்கரன் சந்திரசேகர் அணி 3 ம் இடம், தீரஜ் அஸ்வின்குமார் அணி நான்காமிடம் பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.என்.ஐ. நிர்வாக இயக்குநர் ஜெகன் பழனிச்சாமி,சி.இ.ஓ., அனிதா பரிசு வழங்கினர். குமரன் டென்டல் கிளினிக் சுதர்ஸன்,பி.என்.ஐ.நிறுவன உறுப்பினர்கள், அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம். சபீதா அன்ட் கோ சங்கரலிங்கம் பங்கேற்றனர்.

