/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விடுதி மாணவியருக்கு வாந்தி மயக்கம்
/
விடுதி மாணவியருக்கு வாந்தி மயக்கம்
ADDED : பிப் 10, 2024 08:28 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவியருக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 மாணவியர் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இரு நாட்களாக இங்குள்ள மூன்று மாணவியருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட, 10க்கும் மேற்பட்ட மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டது.
இதன் பின், 13, 17 வயதுடைய ஒன்பது மாணவியர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் மாணவியரிடம் விசாரித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள், விடுதியில் வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்.