/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 30, 2025 04:20 AM
வேடசந்தூர்: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் அரசு அலுவலர்கள், சத்துணவு , அங்கன்வாடி பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளுடன் துவங்கியது
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் துவங்கி உள்ளன.
இது தொடர்பாக வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாக்களை உள்ளடக்கிய அலுவலர்கள், சத்துணவு ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் வேடசந்துார் தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன் தலைமை வகித்தார்.
தாசில்தார்கள் சுல்தான் சிக்கந்தர், ரவிக்குமார், அய்யாமணி பேசினர். பங்கேற்ற அரசு அலுவலர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு திருத்த கணக்கெடுப்பு படிவம் கொடுக்க அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.