ADDED : நவ 25, 2024 05:36 AM

வத்தலக்குண்டு, : வத்தலக்குண்டு வி.பி.ஏ. குரூப்ஸ்,செங்கல்பட்டு வி.வி.பி., குரூப்ஸ் இல்ல திருமண வரவேற்பு விழா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் நடந்தது.
பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வத்தலக்குண்டு வி.பி.ஏ., குரூப்ஸ் மணமகள் டாக்டர் ஆர்த்தி எம்.பி.பி.எஸ்., குடும்பத்தை சேர்ந்த தமிழக அரசு மாநில சீர்மரபினர்துறை நல வாரிய உறுப்பினர் சந்திரன், ராஜாத்தி, வி.பி.ஏ. மோகன், தமிழரசி,செங்கல்பட்டு வி.வி.பி., குரூப்ஸ் மணமகன் டாக்டர் நவீன் பாலாஜி எம்.பி.பி.எஸ்., குடும்பத்தினர் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர்கள் புஷ்பமாலா,விக்னேஷ்,நந்தித்தா ஆகியோர் வரவேற்றனர்.
வி.பி.ஏ., குரூப்ஸ் குடும்ப நண்பர்கள் துரை சிங்காரம், தேவாரம் முருகன், ஹோட்டல் ஜமுனா உரிமையாளர் மணிகண்டன், ஈடன்கார்டன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் கென்னடி,ஆர்த்தி ஸ்டோர் உரிமையாளர் குமார் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.