/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காத்திருந்து... காத்திருந்து : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்: மக்கள் சந்திப்பை நிறுத்திக்கொண்ட போட்டியாளர்கள்

ADDED : டிச 03, 2024 07:07 AM

வேடசந்தூர்: உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைய ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு இல்லாததால் தேர்தல் போட்டியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. 2019 டிசம்பரில் தேர்தலை சந்தித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் 2020 ஜன.5 ல் பொறுப்பேற்றனர். ஜன.5 உடன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என்றால் தற்போதே தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் தற்போது இதுவரை தேர்தல் அறிவிப்பு வெளியாகாததால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்பது 100 சதவீதம் உறுதியாகிறது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் படுத்தி வந்த உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்களை சந்திப்பது, இளம் வாக்காளர்களை கவர்வது என சுற்றி வந்த வருங்கால வேட்பாளர்கள், தற்போது முற்றிலுமாக ஓய்வு எடுக்கத் துவங்கி விட்டனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத பட்சத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தனி அலுவலர் தலைமையிலே உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் .
................
கவனம் செலுத்தலாமே
உள்ளாட்சி தேர்தல் தற்போது நடக்காது என்பதால் மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருந்த சமூக ஆர்வலர்கள் , இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலத்தில் மக்கள் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்களோ அதேபோல் தனி அலுவலர் காலத்திலேயும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த உள்ளாட்சித் தேர்தல் காலத்திற்குள்ளாவது குடிநீர், மின்கட்டணம் உள்ளிட்ட கடன்களை முழுமையாக செலுத்தி கடன் இல்லாத ஊராட்சிகளாக வைத்திருக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இல. சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்.
.............