ADDED : நவ 18, 2026 04:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
அனைத்து துாய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று (நவ.,18) முதல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் தொடர் வேலைநிறுத்த காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் காளிராஜ், அழகர்சாமி தலைமை வகித்தனர். தவக்குமார், மாரிமுத்து பேசினர்.
தனியார் ஒப்பந்த முறையை கைவிட்டு மாநகராட்சியே நேரடி பணி வழங்க வேண்டும், துாய்மைப் பணியாளர்களுக்கு விரோதமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் மதுரைவீரன், நாகராஜன் உட்பட தனியார் ஒப்பந்த பணியாளர்கள், வாறுகால் துார்வாரும் ஊழியர்கள், டிரைவர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
