/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரக்கு வாகனத்தில் பயணிப்பதால் காத்திருக்கும். ஆபத்து போதிய பஸ்கள் இல்லாததால் கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

ADDED : மார் 17, 2026 06:11 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் சரக்கு வாகனங்களில் வேலைக்கு செல்லும்
கூலி தொழிலாளர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து சூழல் தொடர்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெரு நகரங்களை இணைக்க அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. அவற்றில் பெரும்பாலான கனரக, இலகு ரக சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் விவசாயம், கட்டடப் பணிகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் இதுபோன்ற சரக்கு வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் குண்டும் குழியுமான ரோட்டில் அதிவேகத்தில் சரக்கு வாகனங்கள் செல்வதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகிறது. குறிப்பாக பழநி பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் தேங்காய்களுக்கு மேல் அமர்ந்து செல்வதால் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களின் பின்புறம் அமர்ந்து கால்கள் தரையில் படும்படி உரசி செல்வதால் படுகாயம் அடைகின்றனர்.
இதுதவிர சரக்கு வாகனங்களில் 'ட்ரம்செட்' போன்ற இசை வாத்தியங்கள் அதிக சத்தத்துடன் இசைத்து செல்வதால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் கவன சிதறலால் விபத்தில் சிக்குகின்றனர்.
தற்போது தேர்தல் அறிவித்துள்ள நிலையில் ஆள் பலத்தை காட்ட பிரசார பொதுக்கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச்செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.