/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபரீதத்திற்கு முன் விழிக்கலாமே: வாகனம் இல்லாமல் நெடுஞ்சாலை ரோந்து பணி நிறுத்தம் n டூவீலரில் சென்று கண்காணிக்க கூறுவதால் விபத்து வாய்ப்பு

ADDED : ஜன 09, 2025 05:40 AM

மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணிக்காக ஜீப்பில் முதலுதவி பெட்டி, அவசர அழைப்பு எண்கள் கொண்ட வசதியுடன் ஆறு போலீசார் எட்டு மணி நேர பணி என்ற நிலையில் இருப்பர்.
மாவட்டத்தில் வடமதுரை, எரியோடு, குஜிலியம்பாறை, வேடசந்துார், தாடிக்கொம்பு, திண்டுக்கல் புறநகர், செம்பட்டி, வத்தலக்குண்டு, அம்மைநாயக்கனனுார் , சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்டு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
ரோந்து பணியில் வாகனங்கள் தேவையற்ற இடத்தில் நின்றிருந்தால் அப்புறப்படுத்துவது, விபத்து நடந்த இடங்களில் உடனடியாக களத்தில் இறங்கி முதல் உதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது ஆகிய பணிகளை செய்து வந்ததால் விபத்தில் இறப்பு எண்ணிக்கை குறைந்தது. மேலும் வாகன சோதனையின்போது திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் சிக்குவதால் குற்றப்பிரிவு போலீசாருக்கும் உதவியாக இருந்தது.
தற்போது வத்தலக்குண்டு, செம்பட்டி, வடமதுரை, தாடிக்கொம்பு முக்கிய ஸ்டேஷன்களில் இருந்த ரோந்து பணி நிறுத்தப்பட்டது. இதற்கு வாகன வசதி இல்லை என காரணம் கூறுகின்றனர்.
கொடைக்கானல், சபரிமலை செல்வோர் இந்த ரோட்டினை பயன்படுத்துவதால் அவர்களுக்கு ரோந்து போலீசார் உதவிகரமாக இருப்பர். ரோந்து போலீசார் இல்லாதது விபத்தினை குறைப்பதற்கு வழி இல்லாமல் உள்ளது.
ஜீப் வழங்காமல் டூவீலரில் சென்று கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் பணித்துள்ளது. டூவீலரில் கண்காணிப்பதால் விபத்து வாய்ப்பு உள்ளட்ட சிரமத்தை கருதி அவர்கள் ஸ்டேஷன் பணிக்கு திரும்பிவிட்டனர்.