/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவியருக்கு 'தொல்லை' தாளாளர், வார்டனுக்கு சிறை
/
மாணவியருக்கு 'தொல்லை' தாளாளர், வார்டனுக்கு சிறை
ADDED : ஜன 03, 2024 12:57 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன், 50, முத்தனம்பட்டியில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லுாரி தாளாளர். இக்கல்லுாரியில் தங்கி படிக்கும் மாணவியருக்காக விடுதியும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 2021ல் விடுதி மாணவியருக்கு ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு விடுதி வார்டனாக இருந்த கர்நாடகாவை சேர்ந்த அர்ச்சனா, 26, என்பவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இருவரையும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, வழக்கை விசாரித்தார்.
குற்றவாளிகளான ஜோதிமுருகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 75,000 ரூபாய் அபராதம், அர்ச்சனாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.