sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை

/

 விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை

 விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை

 விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை


ADDED : பிப் 12, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: ''திண்டுக்கல் மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகின்றன. விவசாயிகள் பராமரித்து வளர்க்கும் கால்நடைகளின் தேவைக்கு விற்பனை செய்வதற்காக குக்கிராமங்களுக்குள் லாரி, மினி லாரிகள், வேன்கள் செல்லும்போது மின் ஒயர்களில் உரசி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: மோட்டார் வாகனங்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 396ன்படி வாகனத்தின் உயர அளவு தரையில் இருந்து வாகனத்தின் ஏற்றப்பட்டுள்ள சரக்கின் உயரம் 3.8 மீட்டர் உயரம் மட்டுமே அனுமதிக்கப்படும். வைக்கோல்களை வாகனங்களில் ஏற்றும்போது அனுமதிக்கப்பட்ட உயரத்தை பின்பற்ற வேண்டும். வைக்கோலை பண்டல் போல் சுற்றி ஏற்ற வேண்டும். இதில் விதிகள் மீறப்பட்டால் வாகனங்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதர பாதுகாப்பு அம்சங்களான சிகப்பு பிரதிபலிக்கும் பட்டைகள், பிரேக் லைட், முகப்பு விளக்கு அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து வாகனங்களை இயக்க வேண்டும்., என தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us