/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தீக்காயமுற்ற பெண் சாவு தீ வைக்கப்பட்டாரா
/
தீக்காயமுற்ற பெண் சாவு தீ வைக்கப்பட்டாரா
ADDED : ஜூன் 09, 2025 02:18 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே அச்சம்பட்டி கருப்பனூத்தைச் சேர்ந்த முருகன் மனைவி விஜயா 52. இவர்களது மகன் கருத்தப்பாண்டி. விஜயாவின் கணவர் முருகன் பிரிந்து சென்று விட்டார். விஜயாவும், கருத்தபாண்டியும் மட்டும் தனியாக வசித்தனர்.
சில நாட்களுக்கு முன் விஜயா வீட்டில் தீக்காயமுற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்து விட்டார். முன்னதாக அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் தம்மீது ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்திருந்தார். தீ வைத்த பெண் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.