/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி மகளிர் குழுக்கள் பெயரில் அரங்கேறும் மோசடிகளால் அரசு பணம் வீணடிப்பு; கண்காணிப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் அதிகரிக்கும் வாராக் கடன்

UPDATED : ஏப் 12, 2025 08:27 AM
ADDED : ஏப் 12, 2025 04:34 AM

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் திட்டம் செயல்படுகிறது. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி நிறுவன உதவியுடன் மகளிர் சுய உதவி குழு அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டது..
ஒரே பகுதியைச் சேர்ந்த 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட 12 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில் மகளிரை குழுவாக கொண்ட சுய உதவிக் குழுக்களாக வளர்ந்துள்ளன. சமூக, பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி மகளிரின் திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் வாய்ப்புகள், கடன் உதவிகளும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அரசு, வங்கி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் என பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமாக பெரும்பாலான இடங்களில் இக்குழு அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஊராட்சி, வட்டார, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு என கண்காணிப்பு அமைப்புகளையும் அரசு ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சில இடங்களில் இவற்றை செயல்படுத்துவதிலும் கண்காணிப்பதிலும் நிலவும் தொய்வு காரணமாக முறைகேடுகள் அரங்கேறுவது வாடிக்கையாகிவிட்டது. வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்ட போதும் இவற்றை பெறுவது, திருப்பி செலுத்துதல், அதற்கான வசூல் போன்ற பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் நீடிக்கிறது.
பெயரளவில் குழுக்களை பதிவு செய்து, கடன், மானியம் போன்ற சலுகைகள் கபளீகரம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. கண்காணிப்பு அலுவலர்களின் ஒத்துழைப்பால் இது போன்ற முறைகேடுகள் வெகுவாக அதிகரித்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சுய உதவி குழுக்கள், உறுப்பினர்கள், குழு செயல்பாடு, சமூக தணிக்கை நிலை ஆகியவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து போலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.