/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்
/
சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்
ADDED : நவ 10, 2025 01:01 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி 10 வது வார்டு வழியாக மார்க்கெட் பைபாஸ் ரோடு செல்கிறது.
இந்த ரோட்டில் திருவள்ளுவர் சாலை இணையும் பகுதியின் எதிரே ரோட்டின் வடக்கு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது.
இதனால் ரோட்டின் அடியில் போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சில இடங்களில் உடைந்தது. அவற்றை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இந்த பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பொழுது உடைந்த குழாய்களில் இருந்து தண்ணீர் பீறிட்டு சாக்கடையில் கலக்கிறது.
தொடக்க நாட்களில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே குழாய்களில் இருந்து வெளியேறி சாக்கடையில் கலந்தது.
தற்போது ஓட்டை பெரிதாகி தண்ணீர் பீச்சியடிக்கும் அளவிற்கு செல்கிறது. இப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவது பல மணி நேரங்கள் நீடிப்பதால் அதிகமான குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது. இது குறித்து பலமுறை தெரியப்படுத்தியும் இன்னும் அலட்சியப் போக்கு நீடிக்கிறது.
குழாய் உடைப்பை விரைந்து சரி செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

