/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை; கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் அவதி
/
போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை; கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் அவதி
போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை; கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் அவதி
போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் நிரம்பவில்லை; கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் அவதி
UPDATED : நவ 06, 2025 07:46 AM
ADDED : நவ 06, 2025 05:51 AM

மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. பருவ மழை காலத்தில் பெய்யும் மழையால் நிரம்பும் நீர்நிலைகளை கொண்டு வேளாண் தொழில் சிறப்புற நடந்து வருவது உண்டு. சில நாட்களாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது.
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை அதன் முழு அளவை எட்டுவதற்கு இன்னும் 25 அடி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் பழநி வரதமாநதி அணை நிரம்பி உள்ளது. பாலாறு, பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை இன்னும் நிரம்பவில்லை. ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கமும் இன்னும் நிரம்பவில்லை. மழை நீர் இன்னும் எட்டி கூட பார்க்காத குளங்கள் அதிகம் உள்ளன.
சில குளங்கள் கால் பகுதி அளவு மட்டும் நிரம்பி உள்ளது 2024ல் ஏற்பட்ட நீர்வரத்தே பெரும்பாலான குளங்களில் இன்னும் உள்ளது. இவையும் வற்றி வருவதால் சுற்றிய விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நவம்பர் மாதத்திற்குள் பரப்பலாறு அணை முழு அளவை எட்டி உபரி நீர் அதன் கீழ் உள்ள குளங்களுக்கு செல்வது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு அணை இன்னும் நிரம்ப வில்லை. இதே போல் முக்கிய நீர் தேக்கங்களான கொத்தையம் நல்லதங்காள் அணைக்கட்டு, இடையகோட்டை நங்கஞ்சியாரு நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து குறைவாக உள்ளது. கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வேளாண் தொழில் செய்வது மிகவும் சிரமம் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

