/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தும்மினிகுளத்தில் நீர் நிரப்பும் பணி ஜரூர்
/
தும்மினிகுளத்தில் நீர் நிரப்பும் பணி ஜரூர்
ADDED : அக் 16, 2025 04:54 AM

வடமதுரை: அய்யலுார் தும்மனிக்குளத்தை வரட்டாற்று நீரால் நிரப்பிட வேண்டும் என்பதில் ஆயக்கட்டு விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
அய்யலுார் கோம்பை, புத்துார் மலைகளில் உருவாகும் இரு காட்டாறுகள் கெங்கையூரில் ஒன்று சேர்ந்து மோர்பட்டி வழியே குடகனாற்றில் சேர்கின்றன. இவ்விரு ஆறுகள் ஒன்று சேரும் கெங்கையூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் தும்மனிக்குளத்திற்கு நீர் கொண்டு சேர்ப்பதில் இருக்கும் சிக்கல்களை பருவ மழைக்கு முன்னதாகவே நீக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
குளத்தில் இருந்த முள் மரங்கள், புதர்களை அகற்றிய நிலையில் தற்போது வாய்க்கால் பாதையையும் தயார் செய்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ''குளத்திற்கு நீர் திருப்பும் முதல் பணியாக தடுப்பணை பகுதியில் பாலம் பணி நடப்பதால் முற்றிலும் மதகு பகுதி அடைபட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பாலத்தின் துாண் எழுப்பப்பட்ட பின்னர் ஆற்றில் கிடைக்கும் நீரை திருப்ப முடியும் ''என்றனர்.