தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


UPDATED : அக் 29, 2026 10:38 PM

ADDED : அக் 29, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:38 PM ADDED : அக் 29, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: கனமழை காரணமாக வேடசந்துார் அழகாபுரி குடகனாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார், அழகாபுரி வழியாக 109 கி.மீ., துாரம் பயணித்து அரவை நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே வேடசந்துார் அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இரு கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

குடிநீர் ஆதாரம் கருதி கடந்த மாதம் வரை இந்த அணையில் 12.27 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் ஆத்துார் அணை கிழக்குப் பகுதி, தாடிக்கொம்பு, நல்லமனார்கோட்டை, மாரம்பாடி, விட்டல்நாயக்கன்பட்டி, வேடசந்துார் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குடகனாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால் அழகாபுரி குடகனாறு அணையின் நீர்மட்டம் 17.88 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர்வரத்து உள்ளது. மழைக்காலம் இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில் அணை நிரம்பி பாசனநீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us